T.R.P-யில் சன் டிவியை ஓவர்டேக் செய்த விஜய் டிவி!!

 டி.ஆர்.பி-யில் சன் டிவியை ஓவர்டேக் செய்த விஜய் டிவி சீரியல்.. முதல் 5 இடத்தில் 2 இடத்தைப் பிடித்த விஜய் டிவி..

சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு சின்னத்திரைகளில் ஒளிபரப்பு‌ ஆகி வரும் தொடர்களுக்கு டிஆர்பி ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எப்போதும் டி ஆர் பி யில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவிதான். ஆனால் இந்த முறை சன் டிவி தான் முதல் இடத்தை பிடித்துள்ளதாம். சின்னத்திரைகளில் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களை பட்டியல்கலிட்டு சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.அவற்றுள்,

சுந்தரி : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சுந்தரி. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை கேப்ரில்லா. இத்தொடர் மூலம் கேப்ரில்லா ஏராளமான ரசிகர்கள் பிடித்துள்ளார். அப்போது டிஆர்பிஇல் முதலிடத்தை இப்போது சுந்தரி தொடரில் நடிப்பதற்காக இவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய இயல்பான மற்றும் வெள்ளந்தியான நடிப்பு அனைவர் கவணத்தை கவர்ந்துள்ளது.

பாரதி கண்ணம்மா : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடரானது பாரதி கண்ணம்மா தொடர். இத்தொடரில் கண்ணம்மா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதாம். இந்த தொடரில் ஆண் துணை இல்லாமல் பெண்ணால் தனியாக வாழ முடியும் என்பதை ஆணித்தரமான இத்தொடர் பிரதிபலிக்கிறது.

பாக்கியலட்சுமி : தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களுல் பாக்கியலட்சுமி தொடரில் கதாநாயகி பாக்யாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் இல்லத்தரசிகள் படும் கஷ்டத்தை அப்படியே இத்தொடரில்  பிரதிபலிப்பை காட்டுகிறது. நம் எல்லோர் வீட்டில் இருக்கும் இயல்பான அம்மாவை போலவே  பாக்யாவின் கதாபாத்திரமானது இருக்கும்.

கயல் : சன் டிவியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொடர்களுல் ஒன்று கயல். இத்தொடரில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். தனியாளாக நின்று குடும்பத்தையே பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண்ணின் கதை கயல் தொடர். இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டி ஆர் பி யில் கயல் தொடர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ரோஜா : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ரோஜா.இந்த தொடரில் ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கரி என்பவர் நடித்து வருகிறார். இந்த தொடரில் டிஆர்பியில் ரோஜா தொடர் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளதாம். இந்த தொடர் மூலம் பிரியங்கா நல்கரிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. இத்தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிதொடராக ஓடிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply