இளங்கலை படிப்பிற்கு க்யூட் நுழைவு தேர்வு என தகவல்

 இளங்கலை படிப்பிற்கு க்யூட் நுழைவு தேர்வு என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பல்கலைக்கழகத்தின் மானிய குழுவான, ‘யு.ஜி.சி.,’ தலைவர் அவர் எம்.ஜெகதீஷ் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:யு.ஜி.சி., 45 மத்திய பல்கலைகளுக்கு மானிய உதவி வழங்க உள்ளது. இந்த பல்கலைகளில் வரும், 2022 – 23ம ஆம்  கல்வியாண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை(ug&pg) படிப்புகளில் சேருவதற்கு ‘கியூட்’ என்னும் பொது நுழைவுத் தேர்வு அறிமுகமாக உள்ளது. இந்த தேர்வு, +2 பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் பிரிவுகள் ஏ, பி, மற்றும் பொது தேர்வு இருக்குமாம்

Ug படிப்பிற்கு க்யூட்டாக தேர்வு

அடுத்ததாக தாங்கள் எடுத்து படிக்க வேண்டிய பாடங்களுக்கான தேர்வு இருக்குமாம். முதலாவது பிரிவில், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட, 13 மொழிகளில் தேர்வு எழுதலாம் என கூறப்படுகிறது.இது கட்டாய தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டும் இல்லாமல், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு மொழிகளில் தேர்வு எழுத விரும்புவோர்கள் பி பிரிவினை தேர்வு செய்யலாம் எனவும், மூன்றாவதாக ஒரு மாணவர், அதிகபட்சமாக ஆறு பாடங்களில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்படுகிறது.

தேர்வு இரு பகுதிகளாக நடக்கும் என்கின்றனர். காலையில் ஒரு மொழி, இரு பாடங்கள் சார்ந்த தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடக்கும் என்கின்றனர். மாலையில் பி பிரிவு மற்றும் எஞ்சிய நான்கு பிரிவுகள் சார்ந்த பாடங்களுக்கான தேர்வு நடக்குமாம்.

இந்த தேர்வால் இட ஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் நேராது என்கின்றனர். மாநில பல்கலைகள், தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள் ஆகியவை விருப்பப்பட்டால் க்யூட் தேர்வில் இணையலாம். ஒரே தேர்வு என்கையால் மாணவர்களுக்கும், நிதிச் சுமை குறைய வாய்ப்புள்ளது என்பதால் பெற்றோர்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இது போன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள்.

Leave a Reply