போலீஸ் மீது தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர்கள் !!!

வாரிசு இசை வெளியீட்ட விழா (varisu audio launch)

இன்றைய தினம் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு ( varisu) படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நடைபெறுகின்றது.

அது சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகின்றது. மேலும்  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக அதிகளவில் போலீஸார் காவலுக்காக பாதுகாப்பு தந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கொண்டு இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் முன் நுழைவாயிலில் விஜய் ரசிகர்கள் பலர் குவிந்திருந்தனர். தற்போதுஅதன் வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி  வைரலாகி வருகிறது.

போலீஸை தாக்கிய ரசிகர்கள்

இந்த நிலையில், அரங்கத்தின் நுழைவாயிலில் நின்று இருந்த சில காவல் துறை அதிகாரிகளை தளபதி விஜய் ரசிகர்கள் தாக்கி உள்ளதாக ஒரு  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பெரிய தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று பலராலும் கூறப்படுகிறது.

ஆனால் இருப்பினும் போலீஸ் மீது விஜய் ரசிகர்கள் இப்படி நடந்து கொண்டது பெரிய தவறு என்று சிலர் கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

Leave a Reply