பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திருஷா, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் இருபத்தி எட்டாம் தேதி வெளியாகிறது. இதையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி பதினான்காம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள். ஜெயம்ரவி ஏற்று நடிக்கும் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் காதல் காட்சியின் பாடல் என்பதால், காதலர் தினத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply