சீனா முந்தும் இந்தியா..! 150 கோடியை எட்டும் மக்கள்தொகை

இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தி விடும் என்று ஐநா நிபுணர் குழு கணித்துள்ளது.

Over takes india

எப்படி முந்துகிறது இந்தியா?

உலக நாடுகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடாக சீனா விளங்கிவருகிறது. ஐநா மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதாம் ஆண்டு முதல் சீனா முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்த தகுதியை சீனா இன்னும் இரண்டு மாதங்களில் இழந்து விடும் என்றும் வருகிற ஏப்ரல் மாதத்தில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் ஐநா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. முதலிடத்தில் இருந்த சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் சீனாவுக்கு இணையாக இந்தியா நூற்று நாற்பது கோடி மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டாயிரத்து முப்பதாம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை நூற்றி ஐம்பது கோடியாக உயரும் என்றும் இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழு வரை இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply