வேலையை காட்ட ஆரம்பித்த Chatgpt! அதுக்கும் உதவுதாக வந்த அதிர்ச்சி தகவல்

Chat gpt என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு வினாக்களுக்கு விடை அளித்து வருகிறது. மனித உரையாடல்களை ஒத்திருக்கும் அதன் தன்மை உலக மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அண்மை காலமாக Chat gpt தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வுக் கட்டுரை எழுதுவது, மின்னஞ்சல் அனுப்புவது என பல்வேறு வேலைகள் செய்யப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் தாங்கள் மூழ்கிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். Chat gpt- யின் நன்மைகள் பல இருந்தாலும், அதன் தீமைகள் குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

அந்த கேள்விக்கும் பதிலளித்த Chat gpt

Chat gpt யை உட்படுத்தி நிகழும் சில சர்ச்சையான சம்பவங்கள் அதற்கு உதாரணமாக ஐரோப்பாவிற்கு எப்படி போதைப்பொருட்களை கடத்துவது என்பதை ஒருவர் Chat gpt வாயிலாக கற்றுள்ளார். அந்த நபர் ஏறக்குறைய பன்னிரண்டு மணி நேரம் Chat gpt உடன் உன் உரையாடி போதைப்பொருள் கடத்தும் தொழிலுக்குள் நுழையும் வித்தையை தெரிந்து கொண்டுள்ளார். முதலில் நேரடியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு Chat gpt சாதகமான பதில்களை தராததால் ஏமாற்றம் அடைந்த அவர் கேள்வியை மாற்றி உள்ளார். தாம் ஒரு நாவல் எழுதுவதாகவும், அதில் வரும் வில்லன் கோளாம்பிகாவில் இருந்து பிரிட்டனுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான உதாரணங்களை தருமாறு அவர் Chat gpt. – இடம் கேட்டுள்ளார். அதற்கு Chat gpt அந்த ஆடவர் எதிர்பார்த்த ஆழமான விளக்கங்களை கொடுத்தது. ஆயினும் கடைசியாக தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதோடு, அப்ப பழக்கத்தை ஆதரிப்பதோ தவறு என்பதையும் சுட்டி Chat gpt தனது உரையாடலை முடித்தது.

Leave a Reply