கிழிந்த ரூபாய் நோட்டு- இனி இதைசெய்தால் முழுத்தொகையும் கிடைக்கும்!

எதிர்பாராதவிதமாக ரூபாய் நோட்டுக்கள் கிழிந்து விட்டாலோ, அல்லது, கிழிந்த நோட்டு நம்மிடம் வந்துவிட்டாலோ, அதை என்ன செய்வது என்று கவலைப்படுவது வழக்கம்.

இனி கிழிந்த நோட்டுகளை ஈசியாக மாற்றலாம்.

நாம் வைத்திருக்கும்  ரூபாய் நோட்டுக்கள் எதிர்பாராதவிதமாக கிழிந்து விட்டாலோ, அல்லது, அந்த கிழிந்த நோட்டுகள் நம்மிடம் வந்துவிட்டாலோ, அதை நாம் என்ன செய்வது  என்று மிகவும் கவலைப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இனி நமக்கு அந்தக் கவலையானது வேண்டாம். ஏனென்றால் இதைச் நீங்கள் செய்தால், உங்களுக்கு அந்த கிழிந்த முழுத்தொகையும் கண்டிப்பாக கிடைக்கும் .

கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி?

நாம் வாழும் இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் வங்கிக்க்கோ அல்லது அதன்  கிளைக்கோச் செல்லாமல் ஏடிஎம் (ATM CARD)  கார்டுகள் உதவிகளோடு பயன்படுத்தி ஏடிஎம் மெஷின் மூலமாகப் அவர்களின் பணம் எடுக்கின்றனர். அப்படி ஏடிஎம் மூலமாக நாம் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நாம் ஏடிஎம்களில் நம் பணம் எடுக்கும் போது நம்மில் பலருக்கு சற்று கிழிந்த நோட்டுகளானது வந்திருக்கும். அதுபோன்று  உங்களுக்கும் நடந்தி இருந்தால், நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

இனி உங்களுக்கு சிதைந்த அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுகளானது ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, அந்த ஒரு கிழிந்த ரூபாயை மாற்றுவதற்கு நீங்கள் அந்த ரூபாயை எந்த ஏடிஎம்மில் எடுத்தீர்களோ அதற்குச் சொந்தமான அருகில் இருக்கும் வங்கியில் புகார் செய்ய வேண்டுமாம்.
இந்த ஒரு  புகாரில், நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்த தேதி மற்றும் அந்த நேரம் மற்றும் எடுத்த இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என கூறப்படுகிறது. இதனுடன் நீங்கள் பணம் எடுத்த ரசீதையும் இணைக்க வேண்டுமாம். உங்களிடம் அந்தரசீது இல்லை என்றால், அதற்கு பதில் உங்கள் மொபைல் போனுக்கு வந்த SMS விவரங்களை அதனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

வங்கியில் கிழிந்த நோட்டுகளை மாற்றலாம்

மேலும் ரிசர்வ் வங்கியின் (reserve bank) உத்தரவுப்படி, நீங்கள் வாங்கும் கிழிந்த நோட்டுகளை வழங்கிய அது சம்பந்தப்பட்ட வங்கிகளானது அந்த கிழிந்த நோட்டுகளை மாற்றித் தரவேண்டும் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து இந்தியாவிலேயே மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் (state bank of India) தெரிவித்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போது எந்தவொரு வங்கியாக இருந்தாலும் ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்பட்ட கிழிந்த அல்லது  சிதைந்த நோட்டுகளை மாற்றித்தர கண்டிப்பாக மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதையும் மீறி வங்கிகள் மாற்றித் தருவதற்கு மறுத்தால், அந்த வங்கியின் வங்கி ஊழியர்கள் மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அளிக்கப்படும் வாடிக்கையாளரின் புகாரின்பேரில் அடிப்படையில், அதன் சம்பந்தப்பட்ட வங்கிகள் இந்திய ரூபாய்.10,000 வரை நஷ்டஈடாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply