சிம்புவுக்கு வாய் மட்டும் ரொம்ப அதிகம்.. பிரபல சீரியல் நடிகர் அதிரடி பேட்டி

 சிம்பு குறித்து பிரித்விராஜ் பப்லு கூறியது

தற்போது நடிகர் சிம்பு குறித்து பல நடிகர், நடிகைகள் அவர்களின் பேட்டிகளில் பல விஷயங்களை சிம்புவை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பிரித்விராஜ் பப்லு

அந்த வகையில் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் பப்லு, நடிகர் சிம்புவை குறித்து சில விசயங்களை பேசியுள்ளார். அவள் வருவாளா, வாரம் ஆயிரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவிலான பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் பப்லு.

இப்போது கண்ணான கண்ணே போன்ற  சீரியல்களிலும் நடித்து வருகிறார். படங்களிலும் தோன்றும் பிரித்விராஜ் பப்லு, சிம்பு குறித்து சமீபத்தில் சில பேட்டி ஒன்றில் நன்கு பேசியுள்ளார். இதில் ” அவர் உடல் எடையை குறைத்து உள்ளது மிகவும் வியப்பாக உள்ளது எனவும். அதற்காக அவரை பாராட்டுகிறேன் எனவும் பிரித்திவிராஜ் பப்லு.

சிம்புவுக்கு வாய் ரொம்ப அதிகம்

மேலும் அவர் ” ஆனால் அதே சமயத்தில் உடம்பை தொடர்ந்து கட்டுக்கோப்பாக அப்படியே மெயின்டெயின் செய்ய வேண்டும் இல்லையென்றால் மீண்டும் உடல் எடை கூடி குண்டாகிவிடுவார் என பல முறை சிம்புவுக்கு அட்வைஸ் செய்துள்ளேன். சிம்பு அவர்கள் நான் தூக்கி வளர்த்த பையன் நான் அவரிடம் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால்  வாய் மட்டும்தான் ரொம்ப அதிகம் ” என சிம்பு குறித்து நடிகர் பிரித்விராஜ் பப்லு அவர்கள் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply