அடுத்த வாரத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்

தற்போது சமீபத்தில் தான் விஜய் டிவியின் சீரியலில் ஒன்றான செந்தூரப்பூவே தொடர் முடிவுக்கு வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுவும் ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள்பலருக்கும் ஷாக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியின் இன்னொரு பிரபல சீரியலானது வரும் இந்த  வாரத்தோடு முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலைக்காரன் சீரியல் நிறைவு

தற்போது வெறும் 400 எபிசோடுகளை மட்டுமே கடந்து இருக்கும் விஜய் டிவியின் வேலைக்காரன் தொடர் தான் அடுத்த வாரத்தில் முடிவுக்கு வருகிறது என்கின்றனர். ஆனால்  இருப்பினும் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்  எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதற்கடுத்து வரும் வாரம் முதல் செல்லம்மா என்னும் புதிம சீரியலானது ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிகிறது. 
மேலும் இதுபோன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் நன்றி.

Leave a Reply