ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலர் தினத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி பதினான்காம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தீவிர ஜமால் சார்பில் காதலர் தினத்திற்கு எதிராக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

காதல் என்பது என்ன?
காதலர் தினத்தன்று விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், காதல் என்பது சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட வற்றிற்கு அப்பாற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டாயத் திருமணம் செய்து வைப்பது, பொது இடங்களில் இருப்பவர்களை தாக்குவது உள்ளிட்ட அத்து மீறும் செயல் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்தை அடையாளமாக இருப்பது காதல் என்றும், ஆனால் சிலர் காதலை சாதி யோடும், மதத்தோடு ஒப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.