இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனமாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்களுக்கு ஷாக்

  இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில்  தனமாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் என்பது நல்ல ஒரு குடும்ப சீரியலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த சீரியலில் மூத்த மருமகளாக தனமாக நடித்து வரும்  சுஜிதா சீரியலை விட்டு விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அதே விஜய் டிவி சீரியலான பாக்கியலட்சுமி நடிகை களமிறங்க இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பக் கதைகளை மையப்படுத்தியே தினசரி எபிசோடுகளானது  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலிலேயே முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமை என்பதை கலையாமல் வழிநடத்திச் செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக தனம் கதாபாத்திரமானது இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் மூத்த அண்ணியாக அவருடைய பொறுப்புகளை சரியாக கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸில் தனமாக இனிமேல் சுஜிதா நடிக்கப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸில் சுஜிதாக்கு  பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ரா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறதாம். இப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதை சிறிது சிறிதாக அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறியலாம். அதில் மீனாவின் அப்பா குடும்பத்தை பிரிக்கும் வில்லனாக உருவெடுத்து வருகிறார். அதனால் இப்போது கதையில் சுவாரசியம், விறுவிறுப்பு அதிகமாக ஆகிறது, ஏனெனிலும் இது போல பல்வேறு தடைகள் வந்தாலும் அண்ணன் தம்பிகளின் பாசமானது அதை எல்லாம் வென்று இருக்கிறது.

ஆள் மாற்றம் உண்மையாக இருக்குமா?

ஆகையால் இனிமேல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்பதால் தற்போது தனம் என்ற கதாபாத்திரத்தின் இம்மாற்றத்தினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்களாம். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ரா கதாபாத்திரத்தில் இனி ராதிகா தான் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி உலவுவதால் ரசிகர்கள் உண்மையாக இருக்குமோ அல்லது பொய்யாக இருக்குமோ என்று குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர். இது போன்ற பல செய்திகளை படிக்க நமது பக்கத்தை தினமும் படியுங்கள் .

Leave a Reply